பட்டுபட்டுனு சிதறிய விக்கட்! போராடி 125 ஓட்டங்களை எடுத்த அவுஸ்திரேலியா; வெற்றி முனைப்பில் இங்கிலாந்து
தற்போது துபாயில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் வெறும் 125 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது துபாயில் நடைபெற்று வரும் 26-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலியா எதிர்கொண்டு வருகிறது.
இப்போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் பிஞ்ச் களமிறங்கினர்.
Picture: Twitter @englandcricket
2 பந்துகளை சந்தித்த வார்னர் 1 ஓட்டம் மட்டும் எடுத்து வெளியேறி, எடுத்த உடனே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். அவராவது பரவாயில்லை, அடுத்துவந்த ஸ்டீவ் 5 பந்துகளுக்கு 1 ஓட்டம் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே சொதப்பலானது.
அடுத்து வந்த மேக்ஸ்வெல் 9 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபுள்யு முறையில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னஸ் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகி ஏமாற்றத்தை அளித்தார்.
இதனால், அவுஸ்திரேலிய அணி 6.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 21 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
Picture: Twitter @englandcricket
பின்னர் வந்த மேத்யூ வேட் உடன் ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
ஆனால், மேத்யூ வேட் 18 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்ற கேப்டன் ஆரோன் ஃபின்ச் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
Picture: Twitter @englandcricket
ஃபின்ச்சுடன் இணைந்து பின்வரிசையில் நன்றாக ஆடிய அஷ்டான் அகர் 2 சிக்ஸர்களுடன் 20 ஓட்டங்ககள் அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் பாட் கம்மின்ஸ் 2 சிக்ஸர்களும், மிட்செல் ஸ்டார்க் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாச, தட்டுத்தடுமாறி அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் முடிவில் 125 ஓட்டங்களை அடித்தது.
It's not been Australia's day today, but thanks to some vital knocks by Finch, and some late order hitting by Starc and Cummins Australia get to 125.
— Test Match Special (@bbctms) October 30, 2021
That means England need 126 to win.
?@BBCSounds
?5 Live Sports Extra
?https://t.co/lZdh0xVIrr #bbccricket #T20WorldCup pic.twitter.com/DETFHq985C
இந்நிலையில், 126 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்து அணி தற்போது விரட்டிவருகிறது. எளிதான இலக்கு என்பதால் அதிரடியான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ள இங்கிலாந்து அணி, எளிதாக வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.