வீட்டிற்குள் புகுந்த விஷப் பாம்பை கவனிக்காமல் மிதித்தவருக்கு நேர்ந்த கதி! பின் துணிச்சலுடன் செய்த செயல்
அவுஸ்திரேலியாவில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை கவனிக்காமல் அதை மிதித்த நபரை அந்த பாம்பு பதம் பார்த்துள்ளது.
வீட்டிற்குள் புகுந்து கடித்த பாம்பு
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, பாம்புகள் எங்கும் காணப்படுகின்றன. நாட்டில் பெரும் கவலைக்குரிய ஒரு காரணம், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பதுங்கியிருக்கும் பாம்பை அடிக்கடி காண நேரிடுகிறது.
இந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. இதை கவனிக்காத வீட்டில் இருந்த நபர் அதை மிதிக்க பதிலுக்கு பாம்பு அவரை கடித்துள்ளது.
சிகிச்சை
இதையடுத்து கடித்த பாம்பை பிடித்த அவர் ஜாடிக்குள் அடைத்து வைத்தபடியே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். பின்னர் பாம்பு பிடிப்பதில் வல்லவரான ஹெர்வே பே அங்கு வந்து பாம்பை எடுத்து சென்றார்.
அவர் தெரிவிக்கையில், அந்த பாம்பு கொடிய விஷம் கொண்ட Eastern small-eyed வகையை சேர்ந்ததாகும்.
அதிர்ஷ்டவசமாக அவர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றார். சரியான முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுகிறார். அவர் முழுவதும் குணமடைய வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.