மக்கள் விலை உயர்வால் அவதிப்பட... பல பில்லியன் லிற்றர் எரிபொருளைக் கையிருப்பு வைத்திருக்கும் நாடு
ஈரான் போரினால் எண்ணெய் விலை உயர்வு காரணமாக மக்கள் அவதிப்பட, ஒரு மாதத்திற்கும் மேல் விநியோகம் செய்யும் அளவிற்கு பல பில்லியன் லிற்றர் எரிபொருளை அவுஸ்திரேலியா கையிருப்பு வைத்துள்ளது.
விலை உயர்வு
அவுஸ்திரேலியாவிடம் தற்போது 37 நாட்களுக்கு போதுமான 1.6 பில்லியன் லிற்றர் பெட்ரோலும், 30 நாட்களுக்கு போதுமான 2.7 பில்லியன் லிற்றர் டீசலும், 29 நாட்களுக்கு போதுமான 800 மில்லியன் லிற்றஎ விமான எரிபொருளும் கையிருப்பு உள்ளது.

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தலைமையில் நடைபெற்று வரும் போர் குறித்த உலகளாவிய அச்சங்கள், எரிபொருள் பற்றாக்குறை குறித்த நெருக்கடியைத் தூண்டி, பிராந்திய விநியோகச் சிக்கல்களுக்கும் விலை உயர்வுகளுக்கும் வழிவகுத்துள்ளன.
இந்த நிலையில் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவிக்கையில், எங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், நாங்கள் எதிர்பார்த்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் சரக்குகள் அனைத்தும் எங்களுக்கு வந்து சேர்ந்துவிட்டன; பெட்ரோல் விநியோகம் பாதுகாப்பாகவும், நாங்கள் எதிர்பார்த்தபடியே உள்ளது என்றார்.
எரிபொருள் தட்டுப்பாடு
மேலும், வாகன உரிமையாளர்களின் கவலைகளை கருத்தில்கொண்டு பிராந்தியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அவசரக்கால இருப்புகளிலிருந்து 762 மில்லியன் லிற்றர் வரையிலான பெட்ரோல் மற்றும் டீசலை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மட்டுமின்றி, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், எரிபொருள், விவசாயம், உள்ளாட்சி மன்றங்கள், சுரங்கத் தொழில், தொழிற்சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், திங்களன்று அரசு அதிகாரிகளைச் சந்திக்க உள்ளனர்.

ஈரான் மீதான போரை அடுத்து ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலை உயர்வும் உச்சம் தொட்டது. இந்த நிலையிலேயே, நெருக்கடி எதிர்கொள்ள நாடு இயன்ற அளவு தயாராகவே உள்ளது என அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |