கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை.. சுற்றுப்பயணம் செய்யும் அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணி இலங்கையில் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் விளையாட உள்ளது. 3 டி20 கொண்ட தொடர், 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் இரு அணிகளும் விளையாட உள்ளன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய டி20 மற்றும் ஒருநாள் போட்டி அணிக்கு ஆரோன் பின்ச்சும், டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். கம்மின்ஸுக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், டெஸ்ட் அணியில் இருந்து மார்கஸ் ஹாரிஸ் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேசில்வுட், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். தனது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் ஆடம் ஜம்பா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஆனால், கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் தவித்து வரும் நிலையில், இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டி20 போட்டி தொடர்:
- முதல் போட்டி - கொழும்பு (ஜூன் 7)
- 2வது போட்டி - கொழும்பு (ஜூன் 8)
- 3வது போட்டி - கண்டி (ஜூன் 11)
ஒருநாள் போட்டி தொடர்:
- முதல் ஒருநாள் போட்டி - கண்டி (ஜூன் 14)
- 2வது ஒருநாள் போட்டி - கண்டி (ஜூன் 16)
- 3வது ஒருநாள் போட்டி - கொழும்பு (ஜூன் 19)
- 4வது ஒருநாள் போட்டி - கொழும்பு (ஜூன் 21)
- 5வது ஒருநாள் போட்டி - கொழும்பு (ஜூன் 24)
டெஸ்ட் போட்டி தொடர்:
- முதல் டெஸ்ட் போட்டி - காலே (ஜூன் 29)
- இரண்டாவது டெஸ்ட் போட்டி - காலே (ஜூலை 8)