தற்காலிக விசா வைத்திருக்கும் 7000 பேர் நுழைய முடியாது: எல்லையை மூடி தடை விதித்த நாடு
ஈரானியர்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியா எல்லையை தற்காலிகமாக மூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலிக விசா
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றத்தால் அந்தோணி அல்பானீஸின் அவுஸ்திரேலிய அரசாங்கம், ஈரானியர்களுக்கு தற்காலிகமாக எல்லையை மூடுகிறது.
இதனால் 7,000-க்கும் மேற்பட்ட ஈரானிய தற்காலிக விசா வைத்திருப்பவர்கள், தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் போகலாம் அல்லது விரும்பாமல் இருக்கலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஈரானியர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவது தடுக்கப்படும்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) கூறுகையில், இது துணை வகுப்பு 600 விசா வைத்திருப்பவர்களைப் பாதிக்கும். இந்த நடவடிக்கை, குறிப்பிட்ட சில நேர்வுகளில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் அதே வேளையில், நிலைமையை முறையாக மதிப்பிடுவதற்கு அரசாங்கத்திற்கு அவகாசம் அளிக்கிறது என்றார்.
உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது
மேலும் அவர், "ஈரானில் மோதல் தொடங்குவதற்கு முன்பு வழங்கப்பட்ட பல வருகையாளர் விசாக்கள், இப்போது விண்ணப்பித்திருந்தால் வழங்கப்பட்டிருக்காது.
அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்குவது குறித்த முடிவுகள், அரசாங்கத்தின் திட்டமிட்ட முடிவுகளாக இருக்க வேண்டும்; யார் விடுமுறைக்கு முன்பதிவு செய்தார்கள் என்பதன் தற்செயலான விளைவாக இருக்கக்கூடாது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் உலகளாவிய நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், அவுஸ்திரேலியாவின் குடியேற்ற அமைப்பு ஒழுங்காகவும், நியாயமாகவும், நிலையானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, தேவைக்கேற்ப விதிமுறைகளை மாற்றியமைக்கும்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |