24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆஸ்திரேலியா அணி!
24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, முதல் ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தொடரை ரத்து செய்தது.
மேலும், மறுநாளே நியூசிலாந்து வீரர்கள் நாடு திரும்பினர். இது கிரிக்கெட்டை மீண்டும் தங்கள் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வர போராடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில், 2022 மார்ச் மாதம் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிம் உறுதிப்படுத்தியுள்ளது.
1998-க்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
— Pakistan Cricket (@TheRealPCB) November 8, 2021
இந்த சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தானுடன் 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்று ஒரு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உறுதியான செய்தியை கேட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.