அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை: ஜுலையில் 4.5% ஆக உயர்வு
அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை மாதத்தில் உயர்ந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை
அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு சந்தை ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க மந்த நிலையை அடைந்துள்ளது.
வேலையின்மை விகிதமும் உயர்ந்துள்ளதுடன், ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.5% ஆக உயர்ந்து இருப்பதாக அவுஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின் படி தெரியவந்துள்ளது.

நாட்டின் வேலைவாய்ப்புகள் 15,800 குறைந்து ஒட்டுமொத்த 1.48 கோடிகளாக நிலைபெற்றுள்ளது.
இந்த வேலை இழப்புகள் அனைத்து பகுதி நேர பணியில் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 32,200 பகுதி நேர வேலைகள் ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது.
அதே போல நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் பங்கேற்பு விகிதமும் 66.9% ஆக சற்று குறைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு சரிவுகளை பொருளாதார நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
பகுதி நேர வேலைவாய்ப்புகளில் சரிவுகள் காணப்பட்டாலும், முழு நேர வேலைவாய்ப்புகளில் நிலையான வளர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதையும் இந்த தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |