அவுஸ்திரேலியாவில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை விழுங்கிய புதர்த்தீ: போராடும் 650 தீயணைப்பு வீரர்கள்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஏற்பட்ட புதர் தீயில் 42,000 ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது.
புதர்த்தீ
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள புதர் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் காற்றானது பலமாக வீசியதால் தீயானது மளமளவென பரவியது.
Reuters
வெறும் 24 மணி நேரத்தில் தீயானது 42 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கபளீகரம் செய்தது.
வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்
புதர்த் தீயானது 3 மடங்கு வேகத்தில் பரவ தொடங்கியதால் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவு கொடுக்கப்பட்டது.
இந்த பயங்கர தீயை அணைக்க சுமார் 650 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் மழையானது தீயை அணைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |