2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் பொறுப்பில் இருந்து அவுஸ்திரேலிய நகரம் விலகல்
2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் விலகியுள்ளது.
விக்டோரியா மாகாணம் விலகல்
பல தரப்பட்ட போட்டிகளை உள்ளடக்கிய 2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியாவுன் விக்டோரியா மாகாணம் ஒப்புதல் தெரிவித்து இருந்தது.
ஆனால் போட்டிகளை நடத்துவதற்கான திட்டமிடப்பட்ட செலவுகளை விட கூடுதல் செலவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் வெளியேறியுள்ளது.
AP
இது தொடர்பாக விக்டோரியா மாகாண முதல் மந்திரி டேனியல் ஆண்ட்ரூஸ் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ள தகவலில், கடந்த ஆண்டு எங்கள் அரசாங்கம் காமன்வெல்த் போட்டிகளை நடத்த ஒப்புக் கொண்டது, ஆனால் எவ்வளவு செலவு ஏற்பட்டாலும் பார்த்துக் கொள்வோம் என தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முதலில் 2.6 பில்லியன் அவுஸ்திரேலிய டாலர் என்ற பட்ஜெட்-க்கு தான் தங்களுடைய அரசாங்கம் காமன்வெல்த் போட்டிகளை நடத்த ஒப்புக் கொண்டது, ஆனால் தற்போது 5 உள்ளூர் நகரங்களில் போட்டியை நடத்த சமீபத்தைய நிலைகளின் படி செலவு கணக்கினை கணக்கிடும் போது தோராயமாக போட்டிகளை நடத்தி முடிக்க ஆகும் செலவு மதிப்பு சுமார் 7 மில்லியன் அவுஸ்திரேலிய டாலர்களை தொடுவதாக தெரிவித்துள்ளார்.
AP
அத்துடன் காமன்வெல்த் போட்டிகளில் இருந்து வெளியேறும் தங்கள் அரசாங்கத்தின் முடிவை காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தி விட்டதாக ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு ஆலோசனை
இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்டோரியா மாகாணத்தின் முடிவை தொடர்ந்து விருப்ப தேர்வுகள் குறித்து ஆலோசனை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் பல இடங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டதே செலவு அதிகரிப்புக்கான காரணம் என்றும் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |