AUS vs WI ODI: ஆல்ரவுண்ட் ஷோ காட்டிய Abbott., தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
AUS vs WI: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
சிட்னியில் இன்று முடிவடைந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் கரீபியன் அணியை 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கங்காரு அணி வீழ்த்தியது.
வேகப்பந்து வீச்சாளர் சீன் அபோட் (Sean Abbott) பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) தலைமையிலான அணி ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) முடிவடைந்த இந்த ஆட்டத்தில், நாணயசுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்திரேலியாவிடம் துடுப்பாட்டத்தை ஒப்படைத்தது.
இந்தப் போட்டியில் விண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்பின் (Shai Hope) நம்பிக்கையை விண்டீஸ் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றவில்லை. 100 ஓட்டங்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது அவுஸ்திரேலியா.
டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக அணிக்குள் வந்த Jake Fraser-McGurk 10 ஓட்டங்களிலும், கடந்த போட்டியில் அபாரமான இன்னிங்ஸ் விளையாடிய Josh Ingilis 9 ஓட்டங்களிலும் வெளியேறினார்.
கேமரூன் கிரீன் 33 ஓட்டங்கள், உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டாலும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 33 ஓட்டங்களும், மார்னஸ் லாபுஷனே 26 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
Matt Short ஷார்ட் 41 ஓட்டங்கள், 8-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த SeanAbbott 69 ஓட்டங்கள், Will Sutherland 18 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
அபோட்டின் போராட்டத்தால் அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்கள் எடுத்தது.
மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர்களில் Gudakesh Motie 3 விக்கெட்டுகளையும், Romaria Shepherd மற்றும் Alzarri Joseph ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய விண்டீஸ் இலக்கை நோக்கி செல்ல தடுமாறியது. அணியில் ஒரு வீரர் கூட அரை சதம் அடிக்கவில்லை மற்றும் பார்ட்னர்ஷிப்களை உருவாக்கவில்லை.
அதிகபட்சமாக Keacy Carty மட்டும் 40 ஓட்டங்கள் எடுத்தார். Shai Hope (29), Roston Chase (25) ஆகியோர் சரியாக விளையாடவில்லை.
43.3 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்கு விண்டீஸ் அணி கங்காருக்களின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தது.
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் Josh Hazelwood மற்றும் அபோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், வில் சதர்லேண்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டி வரும் 6ம் திகதி கான்பெராவில் நடக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
AUS vs WI ODI, Sean Abbott all-round brilliance, Australia seal series, West Indies