3 டெஸ்ட், 5 டி20.,சொந்த மண்ணில் ஒரு வெற்றி கூட இல்லை! மே.தீகளை சம்பவம் செய்த அவுஸ்திரேலியா
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
ஷிம்ரான் ஹெட்மையர் 52 ஓட்டங்கள்
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி, செயின்ட் கிட்ஸின் வார்னர் பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 170 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer) 31 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார். டிவர்ஷுய்ஸ் 3 விக்கெட்டுகளும், நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும் அதிரடியில் மிரட்டிய டிம் டேவிட் 12 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் விளாசினார்.
அவுஸ்திரேலியா வெற்றி
மிட்சேல் ஓவன் 17 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்களும், கேமரூன் கிரீன் 18 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்களும் குவித்தனர்.
ஆரோன் ஹார்டி ஆட்டமிழக்காமல் (Aaron Hardie) 28 (25) ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, அவுஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றி மேற்கிந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது.
முன்னதாக டெஸ்ட் தொடரையும் மேற்கிந்திய தீவுகள் 0-3 என முழுதாக இழந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |