276 ரன் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா இமாலய வெற்றி! ஆனால் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிக்ஸர்களை பறக்கவிட்ட பிரேவிஸ்
மெக்கேயில் நடந்த ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 432 என்ற இமாலய இலக்கை தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) மட்டும் சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிக்காக போராடினார்.
ஆனால் அவரது விக்கெட்டை கூப்பர் கொனோலி கைப்பற்றினர். 28 பந்துகளை எதிர்கொண்ட பிரேவிஸ் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்தார்.
கொனோலி 5 விக்கெட்
அடுத்து வந்த வீரர்களும் கூப்பர் கொனோலியின்(Cooper Connolly) மிரட்டலான சுழற்பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் தென் ஆப்பிரிக்கா 24.5 ஓவரில் 155 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
கூப்பர் கொனோலி முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பார்ட்லெட், அபோட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்க அணி தோல்வியுற்றாலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, டி20 தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுத்தது.
142 ஓட்டங்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதும், கேஷவ் மஹாராஜ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |