தோல்வியின் வெறி! வங்கதேசத்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா: ஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடித்து மிரட்டிய கிறிஸ்டியன் விடியோ
வங்கதேச அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற மூன்று போட்டிகளில் , வங்கதேசம் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டி டாக்காவில் இருக்கும் Sher-e-Bangla கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களான மொகமது நலீம்(28), சவுமியா சர்கார்(8) என வந்த வேகத்தில், இருவரையும் அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் பவுலியன் அனுப்ப, அடுத்த வந்த வங்கதேச அணி வீரர்கள்சொற்ப ஓட்டங்களில் வெள்யேற, இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலியா அணில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ டை மற்றும் மிட்சல் ஸ்வப்சன் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
6, 6, 6, 0, 6, 6
— Umar Faruk (@UmarFar30071198) August 7, 2021
38-year-old Dan Christian has just smashed five sixes off one over of Shakib Al Hasan, the No.2 ranked T20I all-rounder in a T20, in Dhaka!#BANvAUS pic.twitter.com/mJrrIHT1EN
அதன் பின், 105 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்கள் பென் டெக்மார்ட்(9) மற்றும் மேத்யூ வேட் 2 ஓட்டங்கள் என வெளியேறியதால், கடந்த போட்டியில் கடைசி கட்டத்தில் சொதப்பிய கிறிஸ்டியன் இந்த முறை மூன்றாவதாக களமிறங்கினார்.
இவர் ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய உலகின் நம்பர் 2 ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் 5 சிக்ஸர்கள் அடித்து பறக்கவிட்டார். இதுவே கடந்த மூன்றாவது டி20 போட்டியில் கிறிஸ்டியன் 19-வது ஓவரில் நான்கு டாட் பால்கலை ஆடினார்.
அவர் மட்டும் அந்த ஓவரில் சிறப்பாக விளையாடி இருந்தால், அவுஸ்திரேலியா அணி அந்த போட்டியை வென்றிருக்கும். ஆனால் கிறிஸ்டியன் சொதப்பியதால், கடும் விமரசனத்திற்குள்ளானர்.
Third T20I : Played four consecutive dot balls in 19th over
— CricTracker (@Cricketracker) August 7, 2021
Fourth T20I: Smashed five sixes in an over
What a comeback from @danchristian54 ?#BANvAUS #DanChristian pic.twitter.com/GkfCa2IkaJ
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிறிஸ்டியன் நடந்து கொண்டார். தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் டேன் கிறிஸ்டியன் 15 பந்தில் 39 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதுமட்டுமின்றி தொடர் தோல்விக்கும் அவுஸ்திரேலியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.