டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி: தொடரை கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தான்
லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இன்று லாகூர் தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி எந்தவொரு வீரரையும் மாற்றாத நிலையில், பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் பங்குபெற்ற ஆல்-ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரஃப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அணியில் சேர்த்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்த முதல் இரண்டு போட்டிகள் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று லாகூரில் தொடங்கவுள்ளது.
லாகூரில் கடந்த 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு நடைபெறும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும்.
மேலும் 1998ம் ஆண்டு முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் விளையாடுவதை தவிர்த்த அவுஸ்திரேலிய அணி, நீண்ட காலத்திற்கு பிறகு பாகிஸ்தானில் விளையாடும் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.
பாகிஸ்தான் அணி : பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், அசார் அலி, ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான், நௌமன் அலி, சஜித் கான், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா
ஆஸ்திரேலியா அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், மிட்செல் ஸ்வெப்சன்
டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி: பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.