விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி... உலக சாம்பியனிடம் டி20 தொடரை இழந்தது இலங்கை!
3வது டி20 போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொரை 3-0 என கைப்பற்றியது அவுஸ்திரேலியா.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டிலுமே அவுஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்று 2-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி கான்பெரா நடந்தது.
3டி20 போட்டியில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலியா, முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சானக்க 39 ரன்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய தரப்பில் பந்து வீச்சில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
122 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 16.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.
அவுஸ்திரேலிய தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 39 ரன்கள் அடித்தார், இலங்கை தரப்பில் மகேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Australia make it three-nil and wrap up the series with two games to spare #AUSvSL
— cricket.com.au (@cricketcomau) February 15, 2022
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொரை 3-0 என கைப்பற்றியது டி20 உலக சாம்பியனான அவுஸ்திரேலியா.
இரு அணிகள் மோதும் 4வது டி20 போட்டி பிப்ரவரி 15ம் திகதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.