மின்னல் தாக்கியதால் நிறம் மாறிய கண்கள்! பரவசமாக உணர்ந்ததாக அனுபவத்தை பகிர்ந்த பெண்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் மின்னல் தாக்குதலால் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார்.
மின்னல் தாக்குதல்
குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த கார்லி எலெக்ரிக் என்ற 30 வயது பெண், 2023ஆம் ஆண்டில் புயலை படம் பிடிக்க ஓடியபோது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகினார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்லி தீவிர சிகிச்சைப் பின்னர் உயிர்பிழைத்தார்.
முன்னதாக, அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் வந்தபோது, கார்லியின் கால்களும், கைகளும் நீல வண்ணத்தில் மாறியிருந்தன.
தலை மற்றும் கழுத்து தவிர அவரால் எதனையும் அசைக்க முடியவில்லை. அவர் விழித்திருந்தபோதும் சுவாசிக்க போராடியுள்ளார்.
தீவிர சிகிச்சைக்கு பின்
கடைசியாக மருத்துவர்கள் பலர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது மட்டுமே அவருக்கு நினைவில் இருந்துள்ளது. அதன் பின்னர் பல மணிநேரம் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
Keraunoparalysis எனும் மின்னல் முடக்கத்திற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின் கார்லி உயிர் பிழைத்துக்கொண்டார்.
எனினும், அவரது உடலில் சில மாற்றங்கள் மின்னல் தாக்கியதால் ஏற்பட்டன. அவர் பூரண குணமடைந்த பின், ஆச்சரியப்படுத்தும் வகையில் பச்சை நிறத்தில் இருந்த கண்கள் அடர் பழுப்பு நிறத்திற்கு மாறிவிட்டன.
மின்னல் தாக்கியது குறித்து கார்லி கூறுகையில், "போதை மருந்து கொடுத்தது போன்று அப்போது உணர்ந்தேன். அந்த சம்பவத்திற்கு பின்னர், கால்களில் உணர்வனைத்தும் இழந்தது போன்று இருந்தது. வியர்த்து கொட்டியது, மயக்கம் வருவது போன்ற உணர்வுடன், பரவசத்தில் இருப்பதுபோல் இருந்தது. ஓர் அங்குலம் கூட நகர முடியவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |