மகளிர் உலகக்கிண்ணம்: மேற்கிந்திய தீவுகளை நொறுக்கி இறுதிப்போட்டிக்கு நுழைந்த அவுஸ்திரேலியா
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஹேலே மேத்யூஸ் 30 ஓட்டங்கள்
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 125 ஓட்டங்கள் எடுத்தது. ஹேலே மேத்யூஸ் 30 ஓட்டங்களும், டோட்டின் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
அணித்தலைவர் சோபி மோலினீக்ஸ், கார்ட்னர் மற்றும் ஜார்ஜியா வேர்ஹம் தலா 2 விக்கெட்டுகளும், அன்னபெல் சதர்லேண்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மூனே விளாசல்
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 13 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெத் மூனே (Beth Mooney) 36 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்களும், ஆஷ்லெய் கார்ட்னர் 20 பந்துகளில் 35 ஓட்டங்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் 8வது முறையாக டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலியா முன்னேறியது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |