ஹசரங்காவின் மாயாஜாலம் வீண்! உலக சாம்பியனிடம் வீழ்ந்தது இலங்கை
டி20 உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று பிப்ரவரி 11ம் திகதி சிட்னி மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் சானக்க, பந்து வீச தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
ஆரோன் பின்ச்(8), பென் மெக்டெர்மாட் (53), ஜோஷ் இங்கிலிஸ் (23), ஸ்டீவன் ஸ்மித் (9), கிளென் மேக்ஸ்வெல் (7), மார்கஸ் ஸ்டோனிஸ் (30), மேத்யூ வேட்(4), பாட் கம்மின்ஸ் (2), மிட்செல் ஸ்டார்க் (1) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆடம் ஜம்பா (2), ஜோஷ் ஹேசில்வுட் (2) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை தரப்பில் பந்து வீச்சில் ஹசரங்க 3 விக்கெட்டுகளை சாய்த்தார். சமீரா, பினுர பெர்னாண்டோ, கருணாரத்னே தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Three for Hasaranga!
— cricket.com.au (@cricketcomau) February 11, 2022
The leggie finishes his spell with the wickets of Finch, Maxwell and Smith #AUSvSL pic.twitter.com/9UErKb5FxQ
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய 14.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, DLS முறைப்படி 2வது இன்னிங்ஸ் 19 ஓவராக குறைக்கப்பட்டு, இலங்கைக்கு 143 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து விளையாடி இலங்கை அணி, 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து படுதோல்வியடைந்தது.
பதும் நிஸ்ஸங்க(36), தனுஷ்க குணதிலகா (1), அவிஷ்க பெர்னாண்டோ (6), சரித் அசலங்கா (16), வனிந்து ஹசரங்க (13), தசுன் சானக்க(7), சாமிக்க கருணாரத்னே (0), துஷ்மந்த சமீரா (5) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தினேஷ் சந்திமால் (25), பினுர பெர்னாண்டோ (2) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Good catch by Smith! Made it look very easy ?#AUSvSL pic.twitter.com/6NevBDCmpY
— cricket.com.au (@cricketcomau) February 11, 2022
அவுஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜம்பா 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 1 விக்கெட்டுடையும் கைப்பற்றினர்.
இலங்கை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என அவுஸ்திரேலியா முன்னிலைப்பெற்றுள்ளது.