தெலுங்கு திரையுலகில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்
இயக்குநர் வெங்கி குடுமுலா இயக்கும் ராபின்குட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படம் மார்ச் 28ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது டேவிட் வார்னர், மைதானத்தில் புஷ்பா பட ஸ்டைலை செய்து காட்டி இந்திய ரசிகர்களை கவர்ந்தவர்.
டேவிட் வார்னர் தெலுங்கு திரைபடத்தில் நடிக்க உள்ளதாக நீண்டகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் டேவிட் வார்னர் நடித்துள்ள திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |