நெருங்கிய தோழியை கரம்பிடித்த வீராங்கனை! வைரலாகும் புகைப்படங்கள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெஸ் ஜோனஸன் தனது தோழியை திருமணம் செய்துள்ளார்.
ஆல்ரவுண்டர் ஜெஸ் ஜோனஸன்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டர் வீராங்கனையாக வலம் வருபவர் ஜெஸ் ஜோனஸன். 30 வயதாகும் இவர் தனது நெருங்கிய தோழியான சாரா குட்டர்ஹம்மை காதலித்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமண நிச்சயம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொள்வதாக உறுதி பூண்டனர். ஆனால், கொரோனா காரணமாக இவர்களின் திருமணம் தள்ளிப்போனது.
இந்த நிலையில் கடந்த 6ஆம் திகதி ஹவாயில் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.
ஜெஸ் ஜோனஸன் வெளியிட்ட பதிவு
திருமணம் தொடர்பான புகைப்படங்களை ஜெஸ் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆச்சரியம்!! 3வது முறையாக அதிர்ஷ்டசாலியாகியுள்ளேன் - இறுதியாக எனது சிறந்த தோழியை மணந்தேன். ஏப்ரல் 6 என் இதயத்தில் எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றிருக்கும்' என குறிப்பிட்டுள்ளார்.
புதுமணத் தம்பதிக்கு சக வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள் பிரண்ட் மற்றும் சிவெர் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
SURPRISE!! 3rd time lucky - finally married my best friend ? April 6th will always have a special place in my heart ?❤️?? #hawaii #wedding #love pic.twitter.com/rOYEyrOGFQ
— Jessica Jonassen (@JJonassen21) April 14, 2023