நாடாளுமன்றத்திற்குள் துஷ்பிரயோகம்: கண்ணீர் விட்டு அழுத அவுஸ்திரேலிய பெண் உறுப்பினர்
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குள் சக்திவாய்ந்த ஆண்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக பெண் உறுப்பினர் ஒருவர், அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவரது குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீர் விட்டு அழுத பெண் உறுப்பினர்
உறுப்பினர் லிடியா தோர்ப் (Lidia Thorpe), சக உறுப்பினர் டேவிட் வோனால் (David Van) தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறி செனட்டில் உரையாற்றியபோது கண்ணீர் விட்டு அழுதார்.
Alex Ellinghausen
கண்ணீருடன், மூச்சுத் திணறல் நிறைந்த குரலில், இங்கு தான் 'பாலியல் வாசனையுள்ள கருத்துகள்', 'தவறான தொடுதல்கள்' மற்றும் சக்தி வாய்ந்த ஆண்களின் தேவையற்ற பேராசை ஆகியவற்றுக்கு ஆளாகியதாக புகார் கூறினார்.
மேலும் அவர் தனது உரையில், பெண்கள் பணிபுரிய நாடாளுமன்ற கட்டிடம் இனி பாதுகாப்பான இடமாக இல்லை என்று அவர் கூறினார்.
Alex Ellinghausen
டேவிட் வான் மறுப்பு
குற்றம் சாட்டப்பட்ட, கன்சர்வேட்டிவ் செனட்டர் டேவிட் வான், குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனால் லிடியா தனது கோரிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்.
குற்றச்சாட்டின் பேரில் வான் லிபரல் கட்சி அவரை இன்று (வியாழக்கிழமை) இடைநீக்கம் செய்தது.
Alex Ellinghausen
2021-ஆம் ஆண்டு முதல், அவுஸ்திரேலிய அரசியல் நாடாளுமன்றத்திற்குள் பாலியல் தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் போன்ற உயர்மட்ட குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.