கொரோனா விதிகளை மீறியவரை தட்டிக்கேட்ட பெண் பொலிசாருக்கு நேர்ந்த கதி: கமெராவில் சிக்கிய காட்சி
அவுஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி தெருவில் நின்றுகொண்டிருந்தவரை அங்கிருந்து புறப்படச் சொன்ன பெண் பொலிசாருக்கு சரமாரியாக அடி விழுந்தது.
அவுஸ்திரேலியாவில் கடுமையாக பொதுமுடக்க விதிகள் அமுலில் உள்ளன. குறிப்பாக சிட்னியில் குறிப்பிடத்தக்க காரணம் இருந்தால் மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி உள்ளது.
இந்நிலையில், இன்று விதிகளை மீறி சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒருவரை அங்கிருந்து புறப்படச் சொல்லியிருக்கிறார்கள் பெண் பொலிசார் இருவர்.
உடனே அந்த 43 வயது நபர், அந்த பெண் பொலிசாரை கண் மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் அந்த நபர் பெண் பொலிசார் ஒருவரை சரமாரியாகத் தாக்குவதையும், அவரிடம் ஏற்கனவே அடிவாங்கிய மற்றொரு பெண் பொலிசார் தூர நின்று உதவி கோரி அழைப்பதையும் காணலாம்.
பிறகு அந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்து காவலில் அடைக்கக் கொண்டு செல்லும்போது மாற்றொரு ஆண் பொலிசாரையும் தாக்கினாராம் அந்த நபர்.
ஆக, மூன்று பொலிசாரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்களாம்.
அவரிடம் விசாரணை நடப்பதாகவும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.