முதலை தாக்குதல்...அவுஸ்திரேலியாவில் காணாமல் போன குழந்தை! சோகத்தில் குடும்பம்
அவுஸ்திரேலியாவில் ஆற்றில் காணாமல் போன குழந்தை முதலை தாக்குதலில் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உடல் கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் வடக்கு பிரதேசத்தில் முதலை தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 12 வயது குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தனர்.
குழந்தை செவ்வாய் கிழமை மாலை காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பிரதேசத்தின் தலைநகரான டார்வினிலிருந்து ஏழு மணி நேர ஓட்டுதூரத்தில் உள்ள பாலும்பா என்ற சுற்றுலாத்தலத்தில் உள்ள ஓடையில் குளித்துக்கொண்டிருந்த போது குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரி கருத்து
இந்நிலையில் முதலை தாக்குதலில் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குழந்தையின் உடலை பொலிஸார் கண்டுபிடிக்கப்பட்டதாக வியாழக்கிழமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"இது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், தேடல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மிகவும் வேதனையளிக்கும் செய்தி" என்று வடக்கு பிரதேச காவல்துறை மூத்த அதிகாரி எரிக்கா கிப்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வடக்கு பிரதேசத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான முதலைகள் இருந்தாலும், முதலை தாக்குதல்கள் அரிதானதே.
இந்த பகுதி பிரித்தானியாவை விட சுமார் ஆறு மடங்கு பெரியது மற்றும் 20 அடி நீளம் வரை வளரும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலைகளுக்கு வாழ்விடமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |