தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை பார்க்க வந்த ஆஸ்திரேலிய எம்.பி.க்கள்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை 2 -வது கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் இன்று (அக்.9) காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் கூடிய கூட்டத்தில், கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
முக்கியமாக, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசையும், கர்நாடகாவையும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்ற உள்ளார்.
ஆஸ்திரேலிய எம்.பி.க்கள்
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக ஆஸ்திரேலியா நாடாளுமன்றக் குழு தலைவர் மில்டன் டிக் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்பட 11 பேர் வந்துள்ளனர்.
அவர்களை, பேரவைத்தலைவர் அப்பாவு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் சார்பில் வரவேற்பதாக பேசி உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |