அவுஸ்திரேலிய ஓப்பன் 2023: முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அரினா சபலென்கா
அவுஸ்திரேலிய ஓப்பன் 2023 பட்டத்தை பெலாரஸை சேர்ந்த அரினா சபலென்கா வென்றார்.
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயதான அரினா சபலென்கா (Aryna Sabalenka) அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
சனிக்கிழமை, மெல்போர்ன் பார்க்கில் ராட் லேவர் அரங்கில் நடந்த 2 மணி 28 நிமிடங்கள் நடந்த இறுதிப்போட்டியில், கஜகிஸ்தானைச் சேர்ந்த 23 வயதான விம்பிள்டன் சாம்பியன் எலெனா ரைபகினாவுக்கு (Elena Rybakina) எதிராக 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சபலெங்கா வெற்றிபெற்றார்.
Sky Sports
கடுமையாக விளையாடி வெற்றிபெற்ற சபலெங்கா மகிழ்ச்சியில் மைதானத்தில் கண்கலங்கினார்.
Your #AO2023 women’s singles champion, @SabalenkaA ?@wwos • @espn • @eurosport • @wowowtennis • #AusOpen pic.twitter.com/5ggS5E7JTp
— #AusOpen (@AustralianOpen) January 28, 2023
வெற்றிக் கோப்பையுடன் அரினா சபலெங்கா
சபலெங்கா இப்போது உலகின் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்து, தனது தொழில் வாழ்க்கையின் உயரத்தை சமன் செய்வார்.
2023 அவுஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற பிறகு டாப்னே அகுர்ஸ்ட் நினைவு கோப்பையுடன் (Daphne Akhurst Memorial Cup ) போஸ் கொடுத்தார் அரினா சபலெங்கா.
Twitter
முதல் நடுநிலை விளையாட்டு வீராங்கனை
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாக, அவுஸ்திரேலியாவில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய வீரர்கள் தனிப்பட்ட தடகள வீரர்களாக மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட முடியாது.
அந்த வகையில், சபாலெங்கா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் நடுநிலை விளையாட்டு வீராங்கனை ஆனார்.
Getty Image