அவுஸ்திரேலிய வீரரின் தாய் உயிரிழப்பு: இரங்கல் தெரிவித்த இந்திய அணி
அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் (Pat Cummins) தாயார் மார்பக புற்று நோயால் நேற்று மரணமடைந்துள்ளார்.
அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அவுஸ்திரேலிய வீரர்கள் கையில் கருப்பு பட்டை கட்டி இன்று நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஆடுகின்றனர்.
அவுஸ்திரேலியா திரும்பிய பேட் கம்மின்ஸ்
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தாலும், அடுத்த போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை கட்டி ஆடி வருகின்றனர்.
@Getty Images
அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் 2-வது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், தனது தாயிற்கு உடல் நலம் சரியில்லை என அவுஸ்திரேலியா சென்றிருக்கிறார்.
இரங்கல் தெரிவித்த வீரர்கள்
அவரது தாயான மரியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பதால் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் திடீரென உடல்நலம் மோசமாகப் பாதிக்கப்பட்டு நேற்று இரவு மரணமடைந்துள்ளார்.
இவரது இழப்பிற்கு கிரிக்கெட் அணி வீரர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவுஸ்திரேலிய அணி வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக நடக்கும் இன்றைய டெஸ்ட் போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் பேட் கம்மின்ஸின் தாயாரது இறப்பிற்குத் அதன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.
On behalf of Indian Cricket, we express our sadness at the passing away of Pat Cummins mother. Our thoughts and prayers are with him and his family in this difficult period ?
— BCCI (@BCCI) March 10, 2023
இதனிடையே, முந்தைய போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாடும் போது அவரது தாயார் அவரை ஊக்கப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.