விராட் கோஹ்லி ஜெர்ஸியில் ஜொலித்த அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் மகள்! ஒரு நெகிழ்ச்சி புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தன்னுடைய ஜெர்சியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் மகளுக்கு பரிசாக அளித்துள்ளார்.
டேவிட் வார்னர் ஒரு ஜாலியான பதிவை இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மகளின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில் டேவிட் வார்னரின் மகள் விராட் கோஹ்லியின் நம்பர் 18 ஜெர்சியை அணிந்துள்ளார். அந்த ஜெர்சியை வார்னர் மகளுக்கு பரிசாக கொடுத்துள்ளார். மிக முக்கியமாக வார்னரின் மகள் விராட் கோஹ்லியின் ரசிகையும் கூட.
இது குறித்து பதிவிட்டுள்ள இன்ஸ்டாவில் பதிவிட்ட வார்னர் "இந்திய தொடரில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி எனது மகளுக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
