விடுமுறைக்கு தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலியர் சிறையில் மர்ம மரணம்!
தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்ட அவுஸ்திரேலியர் ஒருவர், அந்நாட்டு சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் தீவுக்கு சென்ற அவுஸ்திரேலியர்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ விண்டர் (31) என்பவர், தனது முகத்தில் பச்சை குத்திக் கொள்வதற்காக ஐந்து நாள் பயணமாக தாய்லாந்தின் தீவான Phuketவிற்கு சென்றார்.
செவ்வாய்க்கிழமை அன்று நாடு திரும்ப இருந்த அவர், திங்கட்கிழமை அதிகாலையில் மது அருந்திவிட்டு தகராறு செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மர்ம மரணம்
அதன் பின்னர் படோங் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். நள்ளிரவு வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது இறப்பிற்கான காரணம் உடனடியாக அறியப்படவில்லை. எனினும் விண்டரின் மரணத்திற்கான காரணத்தைக் காட்டும் சிசிடிவி காட்சி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், அவை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.
மரணம் குறித்து விசாரணை
பிரேத பரிசோதனைக்காக விண்டரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தாய்லாந்து பொலிஸார் அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலிய தூதரகம் உடனடியாக துயர செய்தியை விண்டரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ள நிலையில், அவரது உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
கதறும் காதலி
இதற்கிடையில் விண்டரின் காதலியான அய்லா வரோக்சிஸ், தன் காதலரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய்லாந்து பொலிஸாரை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் ஊடகத்திடம் கூறுகையில், 'பொலிஸாரின் கூற்றை நம்ப முடியவில்லை. ஏதோ மோசமான விடயத்தை விளையாடுகிறார்கள் என சந்தேகிக்கிறேன். அவர் தனது வீட்டிற்கு வந்து குடும்பத்தினரை சந்திப்பதற்கான நோக்கங்களை கொண்டிருந்தார். அவர் வழக்கத்தை விட சிறப்பாக செய்ததை, அவரை விரும்பும் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
சிங்கத்தின் இதயத்தைக் கொண்ட அவர் ஒரு பாதுகாவலர் மற்றும் வலிமையானவர். என்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு நான் அவரை நேசித்தேன்' என உருக்கத்துடன் தெரிவித்தார்.