ஜோகோவிச்சை ஆபாசமாக திட்டிய தொகுப்பாளர்கள்: இணையத்தில் கசிந்த வீடியோ
உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் குறித்து தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் ஆபாசமாக பேசிய உரையாடல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் 17ம் திகதி தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக வந்த நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
எனினும் இதுதொடர்பாக விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது, இந்நிலையில் செவன் நியூஸ் மெல்போர்ன் என்ற செய்தித் தொலைக்காட்சி தொகுப்பாளர்களான மைக் ஆமரும், ரெபக்கா மேட்டெர்ன் ஆகியோர் நேரலை முடிந்த பிறகு ஜோகோவிச் குறித்து ஆபாச வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Mike Amor and Bec Maddern forgetting the camera/mic is always on ??? #Djokovic pic.twitter.com/shre3hZpH8
— #OkBoomers? (@MelbTigerTalk) January 11, 2022
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது, ஜோகோவிச்சுக்கு ஆதரவாக பலரும், வீடியோவை கசிய விட்டவர்களுக்கு எதிராகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வீடியோவை வெளியிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக செவன் தொலைக்காட்சி இயக்குநர் க்ரெய்க் மெக்ஃபெர்சன் தெரிவித்துள்ளார்.