உலகையே சுற்றிவர ஆசைப்பட்ட அவுஸ்திரேலிய இளம்பெண்- பெற்றோர்கள் முன்னிலையில் நேர்ந்த பரிதாபம்
அவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் இரவு உணவு உண்ணும்போது திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த அப்பெண், குடும்ப விருந்தின்போது துரதிர்ஷ்டவசமாக தனது பெற்றோர் முன்னிலையில் உயிரிழந்துள்ளார்.
26 வயதான டேனியலா டுச்சாடெல் (Dani Duchatel), மே 21 அன்று இரவு 10 மணிக்குப் பிறகு பிரிஸ்பேனின் மோர்டன் பேயில் உள்ள தனது பெற்றோருடன் இரவு உணவு சாப்பிட்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.
அரசு ஊழியரான இவருக்கு சமீபத்தில் கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து பெற்றோருடன் தங்கி இருந்தார்.
அறுவை சிகிச்சையின் காரணமாக, இரத்த உறைவு ஏற்பட்டு நுரையீரல் தக்கையடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் மருத்துவர்கள் இன்னும் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
டேனி டுச்சாடெல் மயங்கி விழுந்தபோது, அவரது தாயார், கே டுச்சாடெல், அவருக்கு CPR செய்ய முயற்சித்தார், ஆனால் டேனியலாவைக் காப்பாற்ற முடியவில்லை.
மகளின் சோகமான மரணத்தை அவரது தாயார் பேஸ்புக்கில் அறிவித்தார்.
மேலும், டேனியின் குடும்பத்தினருக்கு உதவியாக இருக்க GoFundMe தொடங்கப்பட்டதில், இதுவரை 20000 அவுஸ்திரேலிய டொலர் திரட்டப்பட்டுள்ளது.