மகனுக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி மோசடி செய்த பெண்: அவுஸ்திரேலியாவில் கைது
அவுஸ்திரேலியாவில் தன் மகனுக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கூறி, பெண்ணொருவர் ஆயிரக்கணக்கில் நன்கொடை பெற்றது தெரிய வந்தது.
மகனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்
அவுஸ்திரேலியாவின் வெஸ்ட் லேக்ஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் மிச்சேல் போட்ஸர்.
இவர் மீது இளம் மகனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் ஏமாற்றியதாக 10 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டது.
மிச்சேல் மன உளைச்சலில் இருந்த தன் மகனுக்கு புற்றுநோய் இருப்பதாக பொய்யாகக் கூறி, அவனை போலி மருந்துகளை உட்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார்.
நான்கு ஆண்டுகள்
அதனைத் தொடர்ந்து சமூகத்திடம் இருந்து ஆயிரக்கணக்கான நன்கொடைகளை பெற்றுள்ளார்.
பின்னர் 2024யில் கைது செய்யப்பட்ட மிச்சேல் போட்ஸர் தொடர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் மீதான விசாரணைக்கு பிறகு மொத்தம் நான்கு ஆண்டுகள், மூன்று மாதங்கள் மற்றும் 20 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |