அவுஸ்திரேலியாவில் பெண்ணை சங்கிலியால் கட்டிப் போட்ட காதலன்: சரியான நேரத்தில் தப்பிய காதலி!
அவுஸ்திரேலியாவில் காதலன் ஒருவர் தனது பெண் தோழி வேறு எந்த ஆணுடனும் உறவில் ஈடுபட கூடாது என்பதற்காக படுக்கையில் சங்கிலியால் கட்டிப்போட்டு துன்புறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுக்கையில் சங்கிலியால் கட்டிப் போட்ட காதலன்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிராடி மெக்குகன் என்று பெண் 34 வயது ஜேன் உட்வார்ட் என்பவரும் கடந்த 2024ம் ஆண்டு முதல் உறவில் இருந்துள்ளார்.
இதற்கிடையில் தனது காதலி பிராடி மெக்குகன் வேறு சில ஆண்களுடன் உறவில் இருப்பதாக ஜேன் உட்வார்ட் சந்தேகப்பட தொடங்கியுள்ளார்.
இதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இரவு நேரங்களில் பிராடியின் கால்களில் சங்கிலியால் கட்டிப் போட தொடங்கியுள்ளார்.
இந்த சித்திரவதை நாளுக்கு நாள் அதிகரிக்கவே பிராடி மெக்குகனின் பணப்பை, தொலைபேசி ஆகியவற்றை பறித்து, அவரது நண்பர்கள், வேலை மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்த தொடங்கியுள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல பகல் நேரங்களிலும் பிராடி-யை கனமான சங்கலிகளால் கட்டிப்போட ஜேன் உட்வார்ட் தொடங்கியுள்ளார்.
அவ்வப்போது உணவு மற்றும் கழிப்பறையை பயன்படுத்த மட்டுமே உட்வார்ட் சங்கலியை அவிழ்த்து விட்டுள்ளார். சில சமயங்களில் அதற்கும் மறுத்துள்ளார்.
நேரம் பார்த்து தப்பித்த பிராடி மெக்குகன்
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நியு சவுத் வேல்ஸின் ஓக் பிளாட்ஸில் உள்ள ஏடிஎம்-மிற்கு ஜேன் உட்வார்ட் காதலி பிராடி மெக்குகனை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது தப்பிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவே, அதனை பயன்படுத்தி கொண்ட பிராடி, ஓடிச் சென்று அருகில் உள்ள மருந்து கடையில் ஒழிந்து கொண்டுள்ளார்.
இதன்பிறகு அங்கிருந்த ஊழியரின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த பிராடி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிராடி-க்கு ஏற்பட்ட பலத்த காயம்
மீட்கப்பட்ட பிராடியின் உடலில் விலா எலும்பு முறிவு, சிராய்ப்பு ஆகிய பல காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன், இந்த காயங்கள் பல வாரங்கள் பழையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து காதலன் உட்வார்ட் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது கடத்தல், மற்றும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படுத்துதல், மற்றும் வீட்டு குற்றங்கள் ஆகியவை சுமத்தப்பட்டு அவருக்கான ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
அவர் மீண்டும் அக்டோபரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |