கணவனால் பறிபோன மனைவியின்... அவுஸ்திரேலியாவில் தேவாலயத்தின் வாசலில் அரங்கேறிய சோகம்
அவுஸ்திரேலியாவில் தேவாலயத்தின் பார்க்கிங்கில் கணவன் ஒருவர் தற்செயலாக காரை பின்புறம் நகர்த்திய போது, கார் மனைவி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கணவனின் கவனக்குறைவால் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்
அவுஸ்திரேலியாவில் தேவாலய வாகன நிறுத்துமிடத்தில் பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியின் வடமேற்கு பகுதியில் உள்ள Castle Hill Baptist தேவாலயத்தின் கார் பார்க்கிங்கில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
70 வயதுடைய கணவர் தனது மனைவியை தேவாலயத்தின் வாசலில் இறக்கி விட்டுவிட்டு தற்செயலாக காரை பின்புறம் நகர்த்திய போது, கார் மனைவி மீது மோதி பின் அவரை ஏறி கடந்து சென்றது.
விரைந்து வந்த அவசர சேவைகள்
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த NSW ஆம்புலன்ஸ் சேவையின் துணை மருத்துவர்கள், விபத்திற்குள்ளான பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
Daily Mail
அந்த பெண்ணின் கணவருக்கு காயம் ஏற்படவில்லை. இருப்பினும் அவர் கட்டாய பரிசோதனைக்காக வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் விதிக்கப்படவில்லை, ஆனால் சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.