இனி பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் நாட்டிற்குள் நுழைய தடை! பிரபல ஐரோப்பிய நாடு முக்கிய அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா, பிரித்தானியாவிலிருந்து நேரடியாக வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இந்திய மாறுாபடு இந்திய மாறுபாட்டின் பரவல் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், சில தினங்களுக்கு முன் பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தை வைரஸ் மாறுபாடு பகுதியாக ஜேர்மனி பொது சுகாதார நிறுவனம் அறிவித்தது.
மேலும், மே 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திலிருந்து ஜேர்மனிக்குச் செல்லும் மக்கள், ஜேர்மன் குடிமகனாகவோ அல்லது வசிப்பவராகவோ இருந்தால் மட்டுமே அந்நாட்டிற்குள் நுழைய முடியும்.
மற்றவர்கள் இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என ஜேர்மனி கடுமையான கட்டுப்பாடு விதித்தது.
ஜேர்மனியை தொடர்ந்து பிரித்தானியா பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கக்கூடும் என்று பிரான்ஸ் சூசகமாக தெரிவித்தது.
இந்நிலையில், மீண்டும் பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரியா தடை விதிப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் அல்லது வைரஸின் மாறுபாட்டின் தொற்றுகள் காரணமாக இதற்கு முன்னர் பிரித்தானியா மீது இதுபோன்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் குறைவாகவே உள்ளன, ஆனால் இந்தியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட மாறுபாடு அதிகரித்து வருவதால் ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியா மீதான இந்நடவடிக்கைகளை எடுத்துள்ளன.