2022ஆம் ஆண்டு வரை.. எங்கள் நாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை! ஆஸ்திரேலியா திட்டவட்டம்
ஆஸ்திரேலியாவில் 2022ஆம் ஆண்டு வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கடந்த வருடம் தொடங்கிய கொரோனா வைரஸ் ஓராண்டிற்கு மேல் ஆகியும் இன்று வரை குறையாமல் அப்பாவி மக்களை சூறையாடி வருகின்றது. இதனால் கொரோனாவின் வீரியத்தை குறைக்க உலக நாடுகள் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு எதிராக பேராயுதமாய் தடுப்பூசி செயல்படுவதால் உலக நாடுகள் இதை மட்டுமே நம்பியுள்ளனர். இதனால் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் 2022ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டாது என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
எனினும் புலம்பெயர்ந்தோர் மற்றும் உயர் படிப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரம் நவம்பர் முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்ட நிரந்திர குடிமக்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்பதையும் தெரிவித்துள்ளார்.