இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கார்ட்னர், கிரேஸ்! முதல் போட்டியிலேயே செய்த சம்பவம்
காமன்வெல்த் தொடரில் முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.
பெர்மிங்காமில் நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய மகளிர் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து முதலில் விளையாடியது. ஸ்மிரிதி மந்தனா 17 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து யஸ்டிகா பாட்டியா 8 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். எனினும் ஷஃபாலி வெர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி அதிரடியில் மிரட்டியது. அணியின் ஸ்கோர் 93 ஆக உயர்ந்தபோது, ஷஃபாலி 33 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஜோனசென் பந்துவீச்சில் வெளியேறினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் 34 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசி 7வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
PC: Twitter (@ICC)
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஜோனசென் 4 விக்கெட்டுகளையும், ஸ்சுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
PC: Twitter (@ICC)
அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ரேணுகா சிங்கின் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. துல்லியமாக பந்துவீசிய அவர் முதல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அதன் பின்னர் ரேச்சல் ஹெய்ன்ஸ் 9 ஓட்டங்களில் தீப்தி சர்மா பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 49 ஆக இருந்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்தவேளையில், கார்ட்னர் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஜோடி அவர்களது கனவை தகர்த்தது.
மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 51 ஓட்டங்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்தனர். கிரேஸ் 20 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இறுதிவரை களத்தில் நின்ற கார்ட்னர் 35 பந்துகளில் 52 ஓட்டங்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார். அலனா கிங் 18 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
A brilliant win from Australia ?
— ICC (@ICC) July 29, 2022
Ash Gardner's sensational fifty proves to be the difference between the two sides!#AUSvIND | #B2022 | ? Scorecard: https://t.co/b5P5Z3SGlu pic.twitter.com/DKvbZRTU1c
PC: Twitter (@ICC)