தங்கத்தை தட்டித்தூக்கிய அவுஸ்திரேலியா! இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம்.. குவியும் வாழ்த்துக்கள்
காமன்வெல்த் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
பெர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தொடக்க வீராங்கனை ஹீலியை 7 ஓட்டங்களில் ரேணுகா வெளியேற்றினார். பின்னர் ஜோடி சேர்ந்த மூனே - லன்னிங் இருவரும் அதிரடியில் மிரட்டினர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ஓட்டங்கள் குவித்தது. 36 ஓட்டங்களில் இருந்த லன்னிங் ரன்அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய தஹ்லியா 2 ஓட்டங்களில் வெளியேற, கார்ட்னர் அதிரடியாக 25 ஓட்டங்கள் விளாசினார். இதற்கிடையில் அரைசதம் அடித்த மூனே, 41 பந்துகளில் 8 பவுண்டரிகள் விளாசி 61 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ரேணுகா, ஸ்னேஹ் ராணா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் சொதப்பினர்.
Geez this is good! @CommGamesAUS #BoldInGold pic.twitter.com/F1XJrovzFi
— Australian Women's Cricket Team ? (@AusWomenCricket) August 7, 2022
ஜெமிமா 33 ஓட்டங்களில் ஸ்சுட் பந்துவீச்சில் போல்டானார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் வெற்றிக்காக போராடினார். இந்திய அணியில் ஸ்னேஹ் ராணா, ராதா யாதவ், மெக்னா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
PC: Twitter
இதனால் இந்திய அணி 19.3 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஹர்மன்பிரீத் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார். அவுஸ்திரேலிய அணி தரப்பில் கார்ட்னர் 3 விக்கெட்டுகளும், மேகன் ஸ்சுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
A tight finish in the end and Australia beat India by 9 runs in the final of the Commonwealth Games.#TeamIndia get the SILVER medal ? pic.twitter.com/s7VezmPhLI
— BCCI Women (@BCCIWomen) August 7, 2022
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி தங்கம் வென்றது. தோல்வியால் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. எனினும் இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Cricket and India are inseparable. Our Women's cricket team played excellent cricket through the CWG and they bring home the prestigious Silver medal. Being the first ever CWG medal in cricket, this one will always be special. Best wishes to all team members for a bright future. pic.twitter.com/jTeJb9I9XB
— Narendra Modi (@narendramodi) August 8, 2022