பாகிஸ்தானை போட்டுத்தாக்கி அரையிறுதிக்கு முன்னேறிய அவுஸ்திரேலியா! காமன்வெல்த்தில் அதகளம்
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
காமன்வெல்த் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஹீலி 4 ஓட்டங்களில் சனா பந்துவீச்சில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மெக் லன்னிங்கும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மூனே, தஹலியா மெக்ராத் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
அரைசதம் கடந்த இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது. மூனே 49 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசினார். தஹலியா மெக்ராத் 51 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் குவித்தார்.
PC: Twitter (@ICC)
PC: Twitter (@ICC)
இருவரும் 88 பந்துகளில் 141 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியை தஹலியா மெக்ராத் தனது பந்துவீச்சில் வீழ்த்தினார்.
PC: Twitter (@ICC)
பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா 23 ஓட்டங்களும், ஒமைமா சொஹைல் 23 ஓட்டங்களும் எடுத்தனர். ஆனால் ஏனைய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதிவரை களத்தில் நின்ற ஃபாத்திமா சனா 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
அவுஸ்திரேலிய அணி தரப்பில் தஹலியா மெக்ராத் 3 விக்கெட்டுகளையும் மேகன், டர்சி, ஜெஸ் ஜோன்சென், அலனா கிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
PC: Twitter (@ICC)