நியூசிலாந்தை அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவுஸ்திரேலியா!
காமன்வெல்த் தொடரில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
பெர்மிங்காமில் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை பேட்ஸ் முதல் பந்திலேயே போல்டானார். பின்னர் களமிறங்கிய லும்மர் 17 ஓட்டங்கள் எடுத்தார்.
அதன்பின்னர் அமெலியா கெருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சோஃபி டிவைன் ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்தார். அரைசதம் அடித்த அவர் 48 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அமெலியா கெர் 36 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
Associated Press
நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஸ்சுட் 3 விக்கெட்டுகளையும், தஹ்லியா மெக்ராத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய அவுத்திரேலிய அணியில் ஹீலி 14 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மெக் லென்னிங் 7 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
PC: Twitter
எனினும் பெத் மூனே, தஹ்லியா மெக்ராத் கூட்டணி 58 ஓட்டங்கள் சேர்த்தது. 34 ஓட்டங்கள் எடுத்திருந்த தஹ்லியா மெக்ராத் ரன்அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 103 ஆக இருந்தபோது பெத் மூனே 36 ஓட்டங்களில் தஹூஹூ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஹெய்ன்ஸ், கார்ட்னர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால், அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 145 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் தஹூஹூ 3 விக்கெட்டுகளையும், சோஃபி டிவைன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அதற்கு முன்பாக நடக்க உள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
Associated Press