பணக்காரராவது எப்படி என புத்தகம் எழுதியவருக்கு ரூ 11,000 கோடி கடன்

Money
By Arbin Sep 03, 2026 10:15 AM GMT
Report

Robert Kiyosaki Says He is $1.2 Billion in Debt: தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ராபர்ட் கியோசாகி கூறுகிறார்.

உலகப் புகழ்பெற்ற "Rich Dad Poor Dad" நூலின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி, சுமார் 1.2 பில்லியன் டொலர், அதாவது சுமார் ரூ.11,000 கோடி கடனில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பணக்காரராவது எப்படி என புத்தகம் எழுதியவருக்கு ரூ 11,000 கோடி கடன் | Author Kiyosaki Billion In Debt

பணக்காரனாவது எப்படி என்பதை விளக்கும் நூலை எழுதி, அதில் பல கோடி சம்பாதித்த நபரே ரூ.11,000 கோடி கடனில் இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேனிட்டி ஃபேர் பத்திரிகை ஆகஸ்ட் 26ஆம் திகதி வெளியிட்டுள்ள செய்தியில், 79 வயதான கியோசாகி தற்போது 1.2 பில்லியன் டொலர் கடனில் (இந்திய மதிப்பில் ரூ 1,13,30 கோடி) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அவருடைய புத்தகத்தின் தலைப்பைப் படித்த ஒருவருக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் கடனில் இருப்பது உண்மையில் அந்தப் புத்தகத்தில் உள்ள தனது கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக அவர் கூறுகிறார்.

1997ஆம் ஆண்டு வெளியான இவரது "Rich Dad Poor Dad" நூலானது இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளது. கியோசாகி முதன்முதலில் 2025-ல் தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாகக் கூறத் தொடங்கினார்.

பிறந்தநாள் வாழ்த்துக் கூறி... நேபாளத்தில் இருந்து பெற்றோரின் குரலுக்காக காத்திருக்கும் சிட்னி இளைஞர்

பிறந்தநாள் வாழ்த்துக் கூறி... நேபாளத்தில் இருந்து பெற்றோரின் குரலுக்காக காத்திருக்கும் சிட்னி இளைஞர்

இருப்பினும், செப்டம்பர் 2025-ல் வெளியான 'தி ஹன்னா ஹாமண்ட் ஷோ' நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தில், அந்தக் கடன் ஒரு தந்திரோபாயமானது என்று அவர் விளக்கினார்.

அத்துடன், வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கு கடன் பெறுவதுதான் பணக்காரர்கள் பயன்படுத்தும் உத்தி என தெரிவித்துள்ளார். மேலும், சோம்பேறிகள் மட்டுமே தங்கள் சொந்தப் பணத்தை முதலீடுக்குப் பயன்படுத்துவார்கள்.

கடன் வாங்குவதுதான் உங்கள் வேலை என்றார். மட்டுமின்றி, இந்த வழியில் கடனைப் பயன்படுத்துவது, அதிக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய தனக்கு உதவியதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், கியோசாகியின் வணிகத்தில் தொடர்ந்து பங்குதாரராக இருக்கும் அவரது முன்னாள் மனைவி கிம், வேனிட்டி ஃபேர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 1.2 பில்லியன் டொலர் கடன் இருந்தாலும், அது கியோசாகி தனிப்பட்ட முறையில் சேர்த்த தொகை அல்ல என்றும், மாறாக, அது அவரின் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் குழுவிடம் உள்ள மொத்தக் கடன் என்றும் கூறினார்.

பணக்காரராவது எப்படி என புத்தகம் எழுதியவருக்கு ரூ 11,000 கோடி கடன் | Author Kiyosaki Billion In Debt

மேலும், எங்கள் பங்குதாரர்களுடன் எங்களுக்கு நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை சுமார் 1,500 என்று குறிப்பிட்டார்.

இதனால், தொழில்நுட்ப ரீதியாக, எங்களுக்கு இந்தக் கடன் எல்லாம் இருக்கிறது, ஆனால் அது உண்மையான சொத்துக்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

மட்டுமின்றி, கடனில் கியோசாகியின் தனிப்பட்ட பங்கும் குறைவாகவே உள்ளது. கியோசாகியின் சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கும்போது அதை அடைமானமாக வைத்து மீண்டும் கடன் பெறுவதே கியோசியின் முக்கியமான முதலீட்டு அணுகுமுறையாகும்.

சொத்தை விற்பதற்கு பதிலாக, அதன் மீது கடன் பெற்று கிடைக்கும் தொகையை வேறு பிஸ்னஸுக்கு பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதாகவும், இதன் மூலம் ஒரு முதலீடு தோல்வியடைந்தாலும் அதன் தாக்கம் மற்ற முதலீடுகளை பாதிக்காமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பணக்காரராவது எப்படி என புத்தகம் எழுதியவருக்கு ரூ 11,000 கோடி கடன் | Author Kiyosaki Billion In Debt

'Rich Dad Poor Dad' புத்தகம் 44 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, குறைந்தது 43 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவர் இந்தப் புத்தகத்தை ஷரோன் லெக்டருடன் இணைந்து எழுதினார்.

புத்தகத்தின் முதல் பதிப்பு சுயமாக வெளியிடப்பட்டது, பின்னர் அது ஆம்வே என்ற பன்முனை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு, நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற உதவியது.

வார்னர் புக்ஸ் அந்தப் புத்தகத்தை மீண்டும் வெளியிட்டது, மேலும் 2000-ஆம் ஆண்டில், கியோசாகி ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அந்தப் புத்தகத்தை ஒரு மாபெரும் வெற்றிப் படைப்பாக நிலைநிறுத்த உதவியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US