மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்... இரண்டு வருடங்களுக்கு முன்பே சதித்திட்டம் தீட்டினாரா?
பிரித்தானிய மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர், இந்தியாவில் நடந்த கொலைகளுக்கு ராஜ குடும்பத்தினர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானிய மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த Jaswant Singh Chail (19), இரண்டு வருடங்களுக்கும் மேலாகவே ராஜ குடும்பத்தினர் மீது வெறுப்பு கொண்டிருந்ததாக கருதப்படுகிறது.
Jaswant Singh, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஸ்னாப்சாட்டில் பதிவேற்றிய வீடியோ ஒன்றில், இந்தியாவின் அமிர்தசரஸில் இந்தியர்கள் பலர் பிரித்தானிய இராணுவ வீரர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக, பிரித்தானிய மகாராணியாரைக் கொலை செய்ய முயற்சிக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எழுத்தாளரான Saurav Dutt என்பவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு Jaswant Singh தனக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், ராஜ குடும்பத்தினர் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அந்த மின்னஞ்சலில், மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப், இந்தியாவில் அப்பாவிகளை கொலை செய்ய உத்தரவிட்ட ஜெனரல் டயரின் மகனுடன் ஒன்றாக கடற்படையில் பணி செய்ததால், அவருக்கும் இந்த சம்பவத்தில் பொறுப்பு இருக்கிறது என்றும், அதனால் ஜாலியன்வாலாபாகில் நடந்த கொலைகளுக்காக அவர் உட்பட ராஜ குடும்பத்தினர் மன்னிப்புக் கேட்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் Jaswant Singh.
இதற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள Jaswant Singh மீது மன நல சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Saurav Dutt