எப்ஸ்டீன் சர்ச்சை: இளவரசர் ஆண்ட்ரூ மனைவி குறித்து மீண்டும் ஒரு மோசமான தகவல்
பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசுடைய தம்பியுமான இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைக்குனிவை சந்தித்துவருகிறது.

அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது சமீபத்தில் தெரியவந்ததால் பெரும் சர்ச்சை உருவானது.
வெளியாகியுள்ள மோசமான தகவல்
இந்நிலையில், ஆண்ட்ரூவின் மனைவி சாரா குறித்து மீண்டும் அருவருக்கத்தக்க தகவல் ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆம், சாரா, எப்ஸ்டீனுடன் உடல் ரீதியான உறவு கொண்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வரும் வகையிலான சில மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களிலிருந்து, சாரா எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களை வைத்து பார்க்கும்போது, அவர் எப்ஸ்டீன் மீது பைத்தியமாக இருந்தார் என்றும், இருவரும் பல முறை உடல் ரீதியான உறவு கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன், ராஜகுடும்ப எழுத்தாளரான Andrew Lownie என்பவர், நேரலை நிகழ்ச்சி ஒன்றில், வெளிப்படையாகவே அது குறித்து பேசியுள்ளார்.
ஆண்ட்ரூ, எப்ஸ்டீனுடைய காதலியான கிஸ்லெய்னுடன் நெருக்கமாக இருந்தார், கிஸ்லெய்ன் எப்ஸ்டீனுடன் நெருக்கமாக இருந்தார், ஆண்ட்ரூவின் மனைவி சாராவும் எப்ஸ்டீனும் நெருக்கமாக இருந்தார்கள், இதில் எனக்கு ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் Andrew Lownie.

சாரா, ஆண்ட்ரூவுடன் வாழும்போதே, ஜான் பிரையன் என்னும் நபருடன் நெருக்கம் வைத்திருந்தார்.
1992ஆம் ஆண்டு,பிரையன் சாராவின் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் டெய்லி மிரர் பத்திரிகையில் சில வெளியாகி ராஜ குடும்பத்தை அதிரவைத்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |