சுவிஸ் உணவகம் முன்பு அடுக்கி வைத்திருந்த காங்கிரீட் பாளங்கள் அகற்றம்
சுவிட்சர்லாந்தின் வாலைஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றின் முன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காங்கிரீட் பாளங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
குறித்த தகவலை வாலைஸ் மாநில காவல்துறையும் உறுதி செய்துள்ளது. புதன்கிழமை அதிகாலையிலேயே காங்கிரீட் பாளங்களை அகற்றியுள்ளதாகவும், அதை அங்கே வைத்திருப்பதால எந்த பயனும் இருக்கப் போவதில்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி குறித்த உணவகமானது மூடப்பட்டுள்ளது. Zermatt நகரில் அமைந்துள்ள Walliserkanne என்ற உணவகத்தின் உரிமையாளர்கள், தொடர்ந்து கொரோனா சன்றிதழ்களை சரிபார்க்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார், காங்கிரீட் பாளங்களை அந்த உணவு விடுதியின் வாசலுக்கு முன் அடுக்கி வைத்து வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல முடியாதபடி தடுத்துள்ளனர்.
மட்டுமின்றி உணவக உரிமையாளர்களான மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.