BMW-வின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! சிறப்பு அம்சங்கள் என்ன?
ஜேர்மன் நிறுவனமான BMW எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் அதன் முதல் ஸ்கூட்டராக CE 04 மொடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
CE 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2017-ஆம் ஆண்டில் BMW-வின் Motorrad Concept Link-ல் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2020-ல் அதன் தயாரிப்பை தொடங்கியது.
இந்த ஸ்கூட்டரில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் இருப்பது பல சைடு பேனல், உயரமான ஹேண்டில்பார் மற்றும் முற்றிலும் மாறுபட்ட Floating சீட் உள்ளட்ட பல பிரத்யேக அம்சங்கள் உள்ளன.
இந்த பைக் லைட்டான வெள்ளை நிறத்துடன் மேட் பிளாக் எனும் கருப்பு நிறத்திலும் கலந்து வரும்.
அத்துடன் ஒரு சிறப்பு எடிஷன் போன்று Avantgarde Style variant கிடைக்கும். அதில் Magellan Grey metallic கலர் பயன்படுத்தப்பட்டுள்ளது, மற்றும் கருப்பு அல்லது ஆரஞ்சு நிற சீட், ஆரஞ்சு wind deflector மற்றும் பாடி கிராஃபிக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.
BMW CE 04 ஸ்கூட்டரில், 10.25-inch TFT திரை உள்ளது. அதைக் கொண்டு ஸ்பீட், ரேஞ்ச், மேப் உள்ளவரா பார்த்துக்கொள்ளலாம், மற்றும் ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொள்ளலாம்.
உலகிலேயே முதல் முறையாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் traction control system மற்றும் கூடுதல் ஆப்ஷனாக dynamic traction control கொடுக்கப்பட்டுள்ளது.
CE 04-ல் Eco, Road மற்றும் Rain ஆகிய 3 பயன்முறை (modes) கொடுக்கப்பட்டுகிறது. கூடுதல் ஆப்ஷனாக Dynamic எனும் நான்காவது mode கொடுக்கப்படுகிறது.
BMW CE 04-ல் 8.9 kWh பேட்டரி மற்றும் 20 bhp எலக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 41.5 bhp வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த பவர் ட்ரெய்ன் CE 04 ஐ பூஜ்ஜியத்திலிருந்து 50 கிமீ / மணி வரை 2.6 வினாடிகளில் சென்று மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்ல அனுமதிக்கிறது. ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 130 கி.மீ மைலேஜ் (Range) கொடுக்கும்.
சாதாரண 2.3 கிலோவாட் சார்ஜரைப் பயன்படுத்தி இதன் பேட்டரியை 4 மணி 20 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். அதுவே, 6.9 கிலோவாட் பாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தினால் பேட்டரியை 1 மணிநேர 40 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 45 நிமிடங்களில் 20 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக ஃபுல் சார்ஜ் செய்ய முடியும்.
BMW எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்புற சஸ்பென்ஷனாக 35 mm telescopic forks மற்றும் பின்புறமாக monoshock swingarm சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், முன்புறமாக 2 டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் 1 டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் (Anti-lock braking system) கொண்டுள்ளது. இருப்பினும், BMW நிறுவனம் வளைவுகளில் சென்சார்களை பயன்படுத்தும் BMW ABS Pro பிரேக்கிங் சிஸ்டமை (optional) வழங்குகிறது.