ஒரு மணிநேரத்தில் 50,000 முன்பதிவு., அசத்தலான அம்சங்களுடன் Mahindra XUV 3XO அறிமுகம்
Mahindra and Mahindra சமீபத்தில் XUV 3XO சப்-காம்பாக்ட் எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.
Mahindra XUV 3XO-க்கான முன்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.
60 நிமிடங்களில் 50,000 முன்பதிவு
இந்தப் புதிய SUV முன்பதிவு தொடங்கப்பட்ட 60 நிமிடங்களில் 50,000 முன்பதிவுகளைப் பெற்றது. அதன்படி, ஒவ்வொரு நிமிடத்திற்கும் 833 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த காரின் டெலிவரி மே 26 அன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஏற்கனவே 10,000 XUV 3XO கார்களை தயாரித்துள்ளது. இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவியின் மாதாந்திர உற்பத்தி திறன் 9,000 யூனிட்கள்.
வாடிக்கையாளர்கள் XUV 3XO காரை இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் மூலம் ரூ.21,000 புக்கிங் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
Mahindra XUV 3XO விலை
Mahindra XUV 3XO ஒன்பது வகைகளில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது Tata Nexon, Hyundai Venue, Kia Sonet மற்றும் Maruti Suzuki Brezza போன்ற மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.
Mahindra XUV 3XO எஞ்சின் வகைகள்
இந்த மஹிந்திரா XUV 3XO கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய மூன்று இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது.
இந்த எஞ்சின்கள் அனைத்தும் 200 NM , 230 NM மற்றும் 300 NM Torque-உடன் 110 BHP, 130 BHP மற்றும் 117 BHP பவர் அவுட்புட் உற்பத்தி செய்கிறது.
அனைத்து என்ஜின்களும் 6-Speed Manual Gearbox-உடன் தரமாக வருகின்றன. அதே நேரத்தில் டீசல் எஞ்சின் 6-Speed AMT-ஐ வழங்குகிறது. அதேபோல், பெட்ரோல் என்ஜின்கள் இப்போது புதிய 6-Speed Torque Converter Automatic Transmission-ஐ கொண்டுள்ளன.
Mahindra XUV 3XO அம்சங்கள்
மஹிந்திரா XUV 3XO-ல் panoramic sunroof, 360-degree parking camera, dual-zone climate control, steering modes மற்றும் level 2 ADAS (Advanced Driver Assistance System) உள்ளிட்ட பல பிரிவு-முதல் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், dual 10.25-inch displays, cruise control, wireless phone charger மற்றும் connected car technology போன்ற நிலையான அம்சங்களும் இதில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |