ACTIVA e, QC1 ஆகிய 2 மின்சார ஸ்கூட்டர்களை வெளியிட்டது Honda
இந்தியாவில் நடைபெறும் Auto Expo 2025-ல் ACTIVA e, QC1 ஆகிய 2 மின்சார ஸ்கூட்டர்களை Honda வெளியிட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் புதிய மின்சார ஸ்கூட்டர்களான ACTIVA e: மற்றும் QC1 electric ஆகியவற்றை Bharat Mobility Global Expo 2025-ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ACTIVA e: ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.1.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் QC1 electric ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.90,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் மின்சார இரு சக்கர வாகனங்கள் ஆகும்.
நிறுவனம் ஏற்கனவே இந்த இரண்டு ஸ்கூட்டர்களுக்காக முன்பதிவைத் தொடங்கியுள்ளது.
ரூ.1,000 டோக்கன் தொகை செலுத்தி அவற்றை முன்பதிவு செய்யலாம்.
ஹோண்டா நிறுவனம் இரண்டு EVகளையும் இந்தியாவில் நவம்பர் 2024-இல் அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களின் விநியோகமும் 2025 பிப்ரவரி மாதம் தொடங்கும்.
இந்த இரண்டு EV ஸ்கூட்டர்களும் Olaவின் S1 சீரிஸுடன் போட்டியிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Honda ACTIVA e:, Honda QC1, Honda Electric Scooter, Auto Expo 2025, Bharat Mobility Global Expo 2025