19 கிலோவில் மடிக்கக்கூடிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய Honda.!
இந்தியாவில் Auto Expo 2025-ல் மடிக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை Honda அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் Honda தனது மடிக்கக்கூடிய இ-ஸ்கூட்டர் மோட்டோகாம்ப்டோவை (MotoCompacto) காட்சிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இதன் விலை 995 டொலர் ஆகும். தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது விலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
சிறப்பு விடயம் என்னவென்றால், இந்த ஸ்கூட்டர் 19 கிலோ மட்டுமே, ஆனால் 120 கிலோ வரை எடையுள்ள ஒருவர் இதில் வசதியாக பயணிக்க முடியும்.
இந்த ஸ்கூட்டர் நீர் எதிர்ப்பு (Water Resistant) உத்தரவாதத்துடன் வருகிறது.
மோட்டோகாம்பாக்டோவின் வடிவமைப்பு மிகவும் எளிமையாக வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மடிக்கக்கூடிய இ-ஸ்கூட்டர் ஆகும்.
இருக்கை, ஹேண்டில்பார்கள் மற்றும் சக்கரத்தை ஒரு சூட்கேஸ் போல மடிக்கமுடியும், இதன்மூலம் இதை எடுத்துச் செல்வதை எளிதாக்கபட்டுள்ளது.
இந்த இ-ஸ்கூட்டர் 742 மிமீ நீளம், 94 மிமீ அகலம் மற்றும் 536 மிமீ உயரம் கொண்டது. இ-ஸ்கூட்டரின் வீல்பேஸ் வெறும் 742 மிமீ மற்றும் இருக்கை உயரம் 622 மிமீ ஆகும்.
டாப் ஸ்பீடு 24.14kmph, சார்ஜிங் 3:30 மணிநேரம் MotoCompacto ஒருpermanent magnet direct-drive motor-ஐ கொண்டுள்ளது, இது அதிகபட்சமாக 490W பவரையும், 16Nm முறுக்குவிசையையும் உருவாக்குகிறது.
இந்த இ-ஸ்கூட்டர் 19.31 கிமீ Range-யும், மணிக்கு 24.14 கிமீ வேகத்தையும் கொண்டுள்ளது.
இது 0.7 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இதை 3V சாக்கெட் வழியாக 3 மணிநேரம் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Honda Foldable Electric Scooter Motocompacto, Honda Motocompacto