ஆட்டோ எக்ஸ்போ 2025: Access மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் Suzuki
சுசுகி மோட்டார் இந்தியா, தனது முதல் மின்சார ஸ்கூட்டரை டெல்லியில் நடைபெறும் 2025 பாரத் மோபிலிட்டி எக்ஸ்போவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இப்புதிய மாடல், Access Electric அல்லது e-Access என்ற பெயரில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
இந்த ஸ்கூட்டர், இந்திய சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட நிலையான பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது.
இது, முன்னர் சுசுகி அறிமுகப்படுத்திய e-Burgman மாடலில் இருந்து மாறுபட்டதாக இருக்கும்.
Access Electric Scooter-ல் நிலையான பேட்டரிகள், அதிக சேமிப்பு இடத்தையும், நடைமுறைக்கு ஏற்ற வசதிகளையும் வழங்கப்படும்.
- Range: 80-100 கிமீ எதிர்பார்க்கலாம்.
- அதிகபட்ச வேகம்: மணிக்கு 80 கிமீ
- வடிவமைப்பு: தற்போதைய Access 125 மாடலைப் போலவே இருக்கும்.
சுசுகி, இந்திய மின்சார வாகன சந்தையை அடையும் நோக்கத்தில், மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2025-இல், இதுகுறித்த மேலதிக விவரங்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Auto Expo 2025, Suzuki Access Electric Scooter, Bharat Mobility Expo 2025, Suzuki Motorcycle India Private Limited