புதிய Creta, Verna கார்களை திரும்பப் பெறும் Hyundai., ஏன் தெரியுமா?
7698 Creta மற்றும் Verna கார்களை Hyundai நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் பிரபல Sedan மொடலான Hyundai Verna மற்றும் SUV Cretaவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 7,698 கார்களை திரும்பப் பெற்றுள்ளது.
1.5 லிட்டர் naturally aspirated petrol engines கார்கள் கொண்ட இரண்டு CVT automatic வகைகளும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hyundai Creta, Verna
க்ரெட்டா மற்றும் வெர்னா மாடல் கார்களில் உள்ள electronic oil pump controller-ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
CVT automatic gearboxes-ல் உள்ள எலக்ட்ரானிக் எரிபொருள் பம்ப் பழுதடைந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 13 முதல் ஜூன் 6 வரை தயாரிக்கப்பட்ட 7,698 யூனிட் கார்கள் திரும்பப் பெறப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ குறியீட்டின் அடிப்படையில் இந்த கார்கள் திரும்பப் பெறப்படும் என்று தெரியவந்துள்ளது.
Hyundai அறிக்கை
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பணிமனை மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசி மற்றும் SMS மூலம் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் டீலர்களையோ அல்லது ஹூண்டாய் கால் சென்டரையோ 1800-114-645 (கட்டண இலவசம்) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்திப்பை மேற்கொள்ளலாம்.
கார்களை சோதனை செய்த பிறகு குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன. குறைபாடுள்ள பாகத்தை இலவசமாக மாற்றுவதாக ஹூண்டாய் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |