உயிரிந்தவரின் உடலுக்குள் இருந்து வெளியே உயிருடன் வந்த பாம்பு! அலறிய பிரேத பரிசோதனை செய்த பெண்
அமெரிக்காவில் பிரேத பரிசோதனை செய்யும் பணியில் இருந்தபோது மனித உடலில் இருந்து, உயிருடன் பாம்பு ஒன்று வெளியில் வந்ததைப் பார்த்ததாக பெண் ஊழியர் கூறியுள்ளார்.
பிரேத பரிசோதனை
மேரிலாண்ட்டில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக வேலை பார்த்து வருபவர் ஜெசிகா (31). இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்த போது தனக்கு நேர்ந்த திகில் அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், இறந்த நபரின் உடலை ஜெசிகா, பரிசோதித்து கொண்டிருந்த போது, அவரது உடலில் உயிரோடு இருக்கும் பாம்பு ஒன்றை கண்டு இருந்துள்ளது. இதனைக் கண்டதும், பதறி அடித்துக் கொண்டு அறையில் இருந்து ஓட்டம் பிடித்த ஜெசிக்கா அதனை பிடித்த பிறகு தான் வெளியே வருவேன் என்றும் கூறி இருக்கிறார்.
பாம்பு வந்தது எப்படி?
மற்றவர்கள் பாம்பை பிடித்து அங்கிருந்து அகற்றிய பிறகே மீண்டும் தன் வேலையை தொடர உடலின் அருகில் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த உடல், ஓடை ஒன்றின் அருகில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்போது உடலுக்குள் அந்த பாம்பு புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இறந்தவரின் உடலில் இறந்த பின் பாம்பு சென்று இருக்கலாம் எனவும், உடல்கள் சூடாகவும் ஈரமாகவும் இருந்ததால் பூச்சிகள் ஊர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதேப்போல், வறண்ட சடலத்தில் அப்படி எதுவும் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.
Unsplash